Skip to main content

e-iEvolve

ஒருவர் தனது மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியம் குறித்து ஆழமான புரிதலும் தெளிவான அறிவும் பெற்றிருப்பது அவசியம் என்று திரு. ஈசுவரன் அவர்கள் உறுதியாக நம்பினார். எனவே, குழந்தைகள் இளம் வயதிலிருந்தே தங்களது தாய்மொழி, கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களைக் கற்றறிவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை அவர் தொடர்ந்து முன்னிறுத்தினார்.  

இத்தகைய அறிவும் புரிதலும், அவர்களை கலாச்சார பொறுப்புணர்வுமிக்க மனிதர்களாக வளர உதவுவதோடு, தங்களது மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாத்து, காலத்திற்கேற்ப மேலும் வளப்படுத்தி, எதிர்காலத் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லவும் வழிவகுக்கும். இந்தத் தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில், உள்ளூர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் தனித்துவமான கூறுகளைப் பாதுகாத்தல், வளர்த்தல் மற்றும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை உங்களிடமிருந்து iEvolve வரவேற்கிறது.

கைவினை, பாரம்பரியத் திறன்கள் மற்றும் இலக்கியம் போன்றவற்றின் வழியாக மனித விழுமியங்களை வளர்த்து, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சிகள் ஊக்குவிக்கப்படும்.

அனைவருக்கும் தரமான
கல்வி

திரு. ஈசுவரன் அவர்கள், தரமான கல்வி என்பது ஒருவரின் அடிப்படைக் கற்றல் தேவைகளை நிறைவு செய்யும் கல்வியென நம்பினார்.

மேலும் அறிய

எதிர்கால சமுதாய நல்வாழ்வு

இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல், அறிவு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பேணி வளர்ப்பதன் மூலமே, ஆரோக்கியமும் ஒற்றுமையும் நிறைந்த ஒரு எதிர்கால சமூகத்தை உருவாக்க முடியும்.

மேலும் அறிய