



திரு. ஈசுவரன் அவர்களின் “முயற்சி செய் வெற்றி நிச்சயம்” என்ற ஆழமான நம்பிக்கையுடனும், கல்வி மற்றும் சமூக சமத்துவ இலட்சியங்களுடனும் “Infinitely Evolve (iEvolve)” என்ற நற்பணி முயற்சி செயல்பட உள்ளது.
இந்த iEvolve என்ற முன்னெடுப்பின் குறிக்கோள் கல்வி, உடல்நலம், பண்பாடு மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பை மக்களின் தொடர்- கற்றல், இணைந்து-செயல்படுதல், திறன்-வளர்த்தல் மூலமாக உருவாக்குதல். மேலும், கல்வி, நல்வாழ்வு மற்றும் பண்பாட்டு அடையாளங்களை அடித்தள மக்களுடன் இணைந்து பேணும் தளத்தை உருவாக்குதல். இம்முயற்சிகளின் மூலம் நிலையான சமூக மாற்றங்களை ஏற்படுத்த iEvolve முனைகிறது.
தொலைநோக்குச் சிந்தனையாளர் திரு. ஈசுவரன் அவர்களின் உத்வேகத்துடன், பின்வரும் உன்னத இலக்குகளை நோக்கி ஒன்றிணைந்து செயலாற்ற தனிநபர்கள், சமுதாயக் குழுக்கள் மற்றும் நிறுவனங்களை அன்போடு வரவேற்கிறோம்.
திரு. ஈசுவரன் அவர்கள், தரமான கல்வி என்பது ஒருவரின் அடிப்படைக் கற்றல் தேவைகளை நிறைவு செய்யும் கல்வியென நம்பினார்.
மேலும் அறிய
இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல், அறிவு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பேணி வளர்ப்பதன் மூலமே, ஆரோக்கியமும் ஒற்றுமையும் நிறைந்த ஒரு எதிர்கால சமூகத்தை உருவாக்க முடியும்.
மேலும் அறிய
ஒருவர் தனது மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியம் குறித்து ஆழமான புரிதலும் தெளிவான அறிவும் பெற்றிருப்பது அவசியம் என்று திரு. ஈசுவரன் அவர்கள் உறுதியாக நம்பினார்.
மேலும் அறிய
எங்களுடைய இலட்சியங்களுடன் இணைந்து பணிபுரிய, செயல் திட்டங்களுடன் முன்வரும் ஆர்வலர்களுக்கு iEvolve நிதியுதவி, உதவித்தொகைகள் மற்றும் பல கூட்டுப்பணி ஆதரவுகளை வழங்கும்.
இணைய விரும்புவோர் இங்கே தொடர்பு கொள்ளவும்..
உங்கள் எழுத்து வடிவிலான படைப்பு, படங்கள், ஒலி அல்லது காணொளி கோப்புகளைப் பதிவேற்றுவதன் மூலம்.