இந்தியா போன்ற வளரும் நாட்டில் திரு. ஈசுவரன் அவர்கள் மேற்கொண்ட பணிகள் எளிதானவை அல்ல. இருந்தாலும், அவரது தொலைநோக்குப் பார்வையும் தெளிவான திட்டங்களும் இந்திய ஆசிரியர்களை ஒன்றிணைக்க உதவின. 1997 முதல் 2014 வரை அகில இந்தியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (AIPTF) பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.
AIPTF நிறுவனர்களான மறைந்த ஆச்சார்யா எம். வி. தோண்தே மற்றும் மறைந்த திரு. ஜெகதீஷ் மிஸ்ரா ஆகியோரின் வழிகாட்டுதலுடன் அவர் தேசிய அளவிலான கல்வி மற்றும் இயக்க பணிகளை மேற்கொண்டு, இந்திய ஆசிரியர்களிடையே ஒற்றுமையை வளர்த்ததுடன், அவர்களை உலகளாவிய ஆசிரிய அமைப்புகளுடனும் இணைத்தார்.
ஒரு நாட்டின் அடித்தள வளர்ச்சிக்கு எழுத்தறிவும் தரமான தொடக்கக் கல்வியும் இன்றியமையாதவை என்பதை திரு. எஸ்வரன் அவர்கள் ஆழமாக நம்பியதோடு, தனது செயல்பாடுகளின் மூலமும் அதனை எடுத்துக்காட்டினார். இதனைச் சாதிப்பதற்கு, ஆசிரியர்களின் மேம்பாட்டிற்காக அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்தும் தொடர்ச்சியான ஆதரவைப் பெறுவது மிகவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்தியாவில் இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் திரு. எஸ்வரன் அவர்கள் முக்கியப் பங்காற்றினார். தேசிய அளவிலான ஆசிரியர் இயக்கத்தின் தலைவராக, தான் முன்னெடுத்த பணி மிகப்பெரிய இலக்கைக் கொண்டது என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். எனவே, குறுகிய கால இலக்குகளையோ அவ்வப்போது கிடைக்கும் வெற்றிகளையோ நோக்கிய செயல்பாடாக அல்லாமல், தொடக்கக் கல்வியின் தரத்தை நிலையாக மேம்படுத்தும் ஓர் இயக்கமாகவே தனது பணியை அவர் கருதினார்.
தான் ஏற்றுக்கொண்ட இலட்சியத்தில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அவர், அச்சமின்றி வழிநடத்திய உறுதியான தலைவராகத் திகழ்ந்தார். தொடக்கக் கல்வியின் தரத்தையும், அதனை வழங்கும் ஆசிரியர்களின் திறனையும் மேம்படுத்துவதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் முதன்மையான கவனம் குழந்தைகளின் கல்வி, மாணவர்கள் தொடர்ந்து பள்ளியில் பயில்வதை உறுதிசெய்தல் மற்றும் அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிலேயே இருக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நம்பினார்.இதன் அடிப்படையில், AIPTF மற்றும் TESTF முன்னெடுத்த பல்வேறு இயக்கங்கள், ஆசிரியர்கள் சமூக நலப் பணிகள் மற்றும் கல்விக்குத் தொடர்பில்லாத பிற குடிமைப் பணிகளில் ஈடுபடுத்தப்படாமல், கற்பித்தலில் முழுமையாகக் கவனம் செலுத்த வழிவகுத்தன. ஆசிரியர்களை இத்தகைய கல்விசாரா குடிமைப் பொறுப்புகளிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சி, ஆசிரியர்களின் பணித்தரத்தையும் அடித்தளக் கல்வியின் தரத்தையும் மேம்படுத்திய ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
உலகத்தர ஆரம்பக்கல்வி இந்திய குழந்தைகளை சென்றடைய, பிராந்திய ஒற்றுமையின் முக்கியதுவத்தினை உணர்ந்து, திரு. ஈசுவரன் அவர்கள் தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பான சார்க் (SAARC) நாடுகளுடனும் இணைந்து செயல்பட்டார். இதன் மூலம் அந்நாடுகள் அனைத்திலும் ஆசிரியர் கூட்டமைப்பின் பணியையும், தொடக்கக் கல்வி மேம்பாட்டையும் விரிவுபடுத்தினார். AIPTF பொதுச் செயலாளராகப் பணியாற்றிய 18 ஆண்டுகளில், ஆறு ஆண்டுகள் சார்க் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இதன் மூலம் தெற்காசிய ஆசிரியர்கள் இணைந்து செயல்படவும், நல்ல கற்பித்தல் முறைகளைப் பகிரவும், தென்கிழக்காசிய நாடுகளுக்கான பொதுவான சவால்களுக்குத் தீர்வு காணவும் வாய்ப்புகள் உருவாயின. இந்தக் கூட்டு முயற்சிகள் தென்கிழக்காசிய ஆசிரியர்களிடையே நல்லுறவையும் அவர்களின் உலக நிலைப்பாடையும், ஒற்றுமையையும் வலுப்படுத்தின.
In a developing nation like India, the missions S. Eswaran persevered were neither smooth nor easy…..
In a developing nation like India, the missions S. Eswaran persevered were neither smooth nor easy. Still, his visionary leadership and focused initiatives and programs as a General Secretary from 1997 to 2014 improved the solidarity of Indian teachers within the All-India Primary Teachers Federation (AIPTF) and connected them to global teachers’ organisations. These national efforts were well received and directly resulted in several active movements that improved the professional conditions for teachers across India with other national leaders. His honest commitment and extraordinary dedication to the cause brought tens of thousands of state primary school teachers to show extraordinary camaraderie and solidarity. These co-ordinated movements that focused on improving the status and rights of primary teachers resulted in the gradual improvement of teachers’ quality of life both professionally and economically. His national-level work in the All-India Primary Teachers Federation (AIPTF) was under the guidance and in complete synchrony with late Shri Acharya M.V. Donde and late Shri Jagdish Mishra, the founders of AIPTF. The government recognised the genuine need to support and facilitate primary education in a developing India when he was at the negotiation table rallying for support to improve the quality of education throughout his life.