பிரச்சினைகளைச் சொல்வதோ உரிமைகளுக்காகப் போராடுவதோ மட்டும் போதாதென நம்பிய திரு. ஈசுவரன் அவர்கள், நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய தெளிவான தீர்வுகளை அரசுக்கு வழங்கினார். கல்வி தனியார்மயமாகி வந்த சூழலில், அவர் வழிநடத்திய ஓர் ஆய்வு அறிக்கை மனித உரிமைகள் ஆணையத்திடம் “4As” என்ற நான்கு அடிப்படை அம்சங்களைத் தீர்வாக முன்வைத்தது: • கல்வி கிடைத்தல் (Availability): தேவையான பள்ளிகளும் கல்வி வசதிகளும் இருக்க வேண்டும். • கற்கும் வாய்ப்பு கிடைத்தல் (Accessibility): அனைவரும் கல்வி பெறக்கூடிய வாய்ப்பு இருக்க வேண்டும். • ஏற்றுக்கொள்ளத்தக்க கல்வி (Acceptability): கல்வியின் தரமும் முறையும் மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். • தேவைகளுக்கு ஏற்ப மாறும் கல்வி (Adaptability): மாணவர்களின் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப கல்வி அமைய வேண்டும். கல்வியை யார் வழங்குகிறார்கள், மாணவர்கள் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கடந்து, இந்த நான்கு அம்சங்களும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கல்வி ஆராய்வு முடிவுகளை வெளியிட்டார். நிலையான, தரமான தொடக்கக் கல்விக்கான தீர்வாக இவற்றை முன்வைத்தார். இந்தக் கருத்துகள் இன்றும் பொருத்தமானவை. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், இந்த நான்கு அம்சங்களில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டாலும் குழந்தைகளின் கல்வியும் வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்பது உலகிற்கு தெளிவாகத் தெரிந்தது.
1990களின் இறுதியிலும் 2000களிலும் தெற்காசியா HIV மற்றும் AIDS தொடர்பான பெரிய சவால்களை எதிர்கொண்டது. இதற்குத் தீர்வு காணவும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் இணைந்து கல்வி பெறுவதை உறுதி செய்யவும் திரு. ஈசுவரன் ஆய்வுக் கூட்டங்களையும், பணிமனைகளையும் இந்தியாவின் பல மாநிலங்களின் வழிநடத்தினார். 2000களில் இந்தியா, இலங்கை மற்றும் ஆசிய–பசிபிக் நாடுகளில் சிறப்புப் பணிக்குழுக்கள் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஆசிரிய இயக்கங்கள் முக்கிய பங்கு வகித்தன. சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் இதற்கான கல்வி வழங்குவது முக்கியத் தீர்வாகக் கருதப்பட்டது. AIDS போன்ற நோயை தடுக்கவும், தொற்றைக் குறைக்கவும், உயிர் பாதுகாப்பையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தவும் கல்வி மட்டுமே உதவும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதேபோல், மெக்சிகோ, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் பரவிய காலங்களிலும் தரமான கல்வியைத் தொடர்ந்து வழங்குவதில் ஏற்பட்ட சவால்கள் ஆராயப்பட்டன. அவை உலக அமைப்புகளிடம் எடுத்துரைக்கப்பட்டு, தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள முக்கிய கருவியாக அமைந்தது. இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில், எதிர்பாராத சமூக பேரிடர்கள், போர் மற்றும் சர்வதேச நோய் தொற்றுகள் போன்ற சவால்களின் போது கல்வியைத்தொடர இத்திர்விகளும் வழிமுறைகளும் ஏதுவாக அமையுமென்பது திண்ணம்.
தாய்மொழியில் கற்பது அறிவை வளர்க்கவும், சுயமாகச் சிந்திக்கவும், தமது பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் இணைந்திருக்கவும் உதவும் என்று திரு. ஈசுவரன் வலியுறுத்தினார். மலையாளம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளும் சரளமாக கையாண்டார். தாய்மொழியான தமிழில் அவர் ஆற்றிய சிறப்பான உரைகளும் பத்திரிகை எழுத்துகளும் கேட்பவர்களையும் வாசிப்பவர்களையும் மிகவும் கவர்ந்தன. சர்வதேச மேடைகளில் ஆங்கிலத்திலும் தெளிவாகவும் திறமையாகவும் கருத்துகளை எடுத்துரைபினும் தமிழின் பால் எல்லையில்லா பற்று கொண்டிருந்தார்.
தமிழைப் பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டிருந்த அதே நேரத்தில், கிராமப்புறக் குழந்தைகள் ஆங்கிலத்தைக் கற்கச் சிறந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தேவை என்பதையும் உணர்ந்தார். குறிப்பாக எழுத்தறிவு குறைவாக இருந்த காலத்தில் இதற்கு முக்கியத்துவம் அளித்து தானே பயிற்சி வகுப்புகளை நடத்தினார். 1960களிலும் 1970களிலும், இந்தியாவில் கல்வி என்பது அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் நல்ல பணிவாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கும் நெருக்கமாகத் தொடர்புடையதாக இருந்தது. கிராமப்புறங்களிலும் வசதிகள் குறைந்த பகுதிகளிலும் வாழும் குழந்தைகள் உயர வேண்டும் என்ற அவரது இலட்சியம் எப்போதும் உறுதியாக இருந்தது.
கிராமப்புறத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராக இருந்தபோது, குழந்தைகள் ஆங்கிலத்தையும் இயற்கை அறிவியலையும் ஆர்வத்துடன் கற்று, நல்ல மதிப்பெண்களைப் பெற உதவும் எளிய, பயனுள்ள கற்பித்தல் கருவிகளை உருவாக்கினார். குழந்தைகளின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் உதவும் வகையில் பல தலைமை செயல்பாடுகளை சார்ந்த கட்டமைப்புகளை பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்தினார்:
கிராமப்புறப் பள்ளிகள் தங்களுக்குத் தேவையான வசதிகளை உருவாக்கித் தன்னிறைவுடன் செயல்பட முடியும் என்று அவர் நம்பினார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே, குழந்தைகள் பொது அறிவையும் உலகச் செய்திகளையும் அறிந்துகொள்ளப் பள்ளிக்காக ஒரு வானொலியை வாங்கினார். ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தமிழ்நாட்டில் ஒரு தொடக்கப்பள்ளிக்காக வாங்கப்பட்ட முதல் வானொலி இதுவாகும்.
Conference on: Educators building the future by working together for quality education
Kurukshetra India
Shri Eswaran always believed in providing realistic and tangible solutions that can be implemented rather than just voicing problems or only fighting for rights. He was a visionary and solution-finder par excellence; he did not lead just to striving for economic benefits but took a holistic approach to provide global improvement. One of the many examples of this is in a research report that was led by Shri Eswaran, where “4As” are presented as solutions to the human rights commission in an increasingly privatising education scape. He clearly outlined the “Availability, Accessibility, Acceptability and Adaptability of primary education regardless of providers or demographics” as the true solution for quality primary education sustainability. This clearly shows its relevance and importance in today’s world. The compromise in any of the “A”s that influence the education of child and student development was quite at the forefront as a serious concern during the global pandemic Covid years.