தனது பரந்த சர்வதேச அனுபவத்தைப் பயன்படுத்தி, AIPTF அமைப்பிற்குள் ஓர் ஆராய்ச்சிக் குழுவை உருவாக்கினார். தொடக்கக் கல்வியின் பல்வேறு அம்சங்களையும் சவால்களையும் இந்தக் குழு ஆராய்ந்தது. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற கற்பித்தல், கற்பித்தலின் தரம், அரசின் தொடக்கப்பள்ளி நிர்வாகம், பள்ளிகளின் அடிப்படை வசதிகள், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆசிரியர்களின் உரிமைகள் ஆகியவை இதில் இடம்பெற்றன. இந்தியாவின் NCERT, ILO, ஐரோப்பிய ஒன்றிய ஆசிரியர் அமைப்புகள் மற்றும் UNICEF போன்ற அமைப்புகளுக்காக வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், கொள்கைப் பரிந்துரைகள், ஆலோசனை ஆவணங்கள் மற்றும் செயல்வழிகாட்டிகளில் அவரது பங்களிப்புகள் வெளிப்பட்டன. AIPTF மூலம் அவர் வழிநடத்திய பல ஆராய்ச்சிகளில் அவரது தொலைநோக்குப் பார்வையும், ஆசிரியர்களின் உண்மையான வாழ்க்கை அனுபவங்கள், பணிச்சூழல்கள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களை இந்திய அரசாங்கம் உட்பட பல ஆசிரிய அமைப்புகளுக்கு எடுத்துரைக்கபட்டது. ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கைகள், அரசு அமைப்புகள், கல்வி கொள்கையாளர்கள், சரியான தேசிய கல்வி கட்டமைப்புகளையும், திட்டமிடல்களையும், தீர்வுகளையும் உருவாக்க உதவின.
2009ஆம் ஆண்டு, 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி உரிமையை வழங்கும் முக்கியச் சட்டத்தை இந்தியா நிறைவேற்றியது. திரு. ஈசுவரன் உள்ளிட்ட பல தேசியக் கல்வித் தலைவர்களின் நீண்டகால முயற்சிகளான தேசியப் பேரணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், களப்பணிகள், கல்வி ஆய்வுகள்- மற்றும் அரசுப் பேச்சுவார்த்தைகள் இதற்கு முக்கிய வழிவகுத்தன. இந்தச் சட்ட இயற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் சமூக மாற்றத்திற்கும் முக்கியமான காரணியாக உலகக் கல்வித் தலைவர்கள் கருதினர். குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க உதவுவதுடன், அதிகமான இளம் மக்களைக் கொண்ட இந்தியாவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வாய்ப்புக்களை அளிக்கும் வரப்பிரசாதமாக அமைந்தது என்பது உறுதி. உலக அரங்குகளில் கல்வி தொடர்பாக இந்தியா ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளையும் ஒப்பந்தங்களையும் திரு. ஈசுவரன் எப்பொழுதும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டுப் பணியாகவே கருதினார். ஆதலால் இந்தியாவின் பெரும் எண்ணிக்கையிலான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை இந்த உலகளாவிய நோக்கத்திற்காக ஒருங்கிணைத்தார். அவர் தனது பணியை ஒரு தனி மனிதப் போராட்டமாகவோ குறுகிய காலச் செயலாகவோ கருதவில்லை. நிலையான தீர்வுகளை உருவாக்கும் இயக்கமான கூட்டுமுனைப்பாக முன்னெடுத்தார். தனது வாழ்க்கையின் கடைசி எட்டு ஆண்டுகளில், “அனைவருக்கும் தரமான கல்வி” என்ற நோக்கத்திற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆசிரியர்கள், அரசு, பொதுமக்கள் மற்றும் கல்வி வழங்கும் அனைவரும் ஒன்றிணைய ஊக்கமளித்தார். தரமான கல்வி எதிர்கால இலக்காக தங்கிவிடாமல், தன் வாழ்நாளிள் நடைமுறைக்கு வர வேண்டுமென்று பல முயற்சிகளை மேற்கொண்டார். இன்று உலகின் பல நாடுகள் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடையத் தங்கள் திட்டங்களை மாற்றி அமைத்து வருகின்றன. “தரமான கல்வியும் வாழ்நாள் முழுவதும் கற்றலும்” என்ற SDG4 நோக்கத்துடன் இணைந்த கல்விக் கனவு, திரு. ஈசுவரனின் வாழ்நாள் செய்தியாக இருந்தது. கல்விக்கான உலகளாவிய இலக்குகள் முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்தே, இந்தியாவில் இதற்கான பொது ஒப்புதலை உருவாக்க அவர் இடைவிடா முயற்சிகளை இந்திய ஆசிரிய இயங்களின் மூலம் ஊக்குவித்தார். மக்களின் தேவைகளையும் சூழலையும் மதிக்கும் தரமான இலவசக் கல்வி, ஆசிரியர்களும் மாணவர்களுக்குமான வாழ்நாள் தொடர்கல்வி வாய்ப்புகள் கட்டாய அவசியமென நம்பினார். அதிகரிக்கும் சவால்களுக்கு இடையே, தன்னிறைவும், அனைவரையும் உள்ளடக்கிய தனிமனித மற்றும் சமுதாய வளர்ச்சியையும் ஆரம்பக்கல்வி வாயிலாக உருவாக்குவதை தன் வாழ்நாள் இலட்சியமாகவே கொண்டிருந்தார்.
Shri Eswaran never lost sight of the global commitments, treaties, and covenants India has committed to education in global forums. Therefore, he took it upon as a collective union mission to work towards that cause, steering the massive members of primary school teachers in India to work globally. As a person who started a movement rather than a fight or a task, Shri Eswaran, as a leader, wanted to provide sustainable solutions. Towards the last 8 years of his life, he rallied around India to bring awareness to a noble cause, “Quality education for all.” He rekindled strength, spirit, and commitment from teachers, the government, the public, and all education providers to join hands for ‘Quality education for all’ so that it can be a reality in India then rather than a goal that remains in the Future.
Today, we see most countries around the world resetting and realigning to achieve many of the Global Sustainable Development Goals (SDGs). Shri Eswaran was quite committed and strived to arrive at a general consensus in India to achieve SDG4 – ‘Quality Education and Lifelong Learning’ since its launch as a millennial global vision. This was indeed his life message, which we all can relate to. Quality education imparted with relevance and sensitivity through free education combined with lifelong learning and development for educators and students alike is the greatest gift we could reward ourselves within an increasingly challenging world that is trying to meet self-sustenance and inclusivity.